‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!

0
218

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். மேலும், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் அதன் இறுதிகட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ‘பீஸ்ட்’ திரைப்படத்தை கோடை விடுமுறையையொட்டி, வருகிற ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை கடந்த 8-ம் தேதி படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது பர்ஸ்ட் சிங்கள் புரமோ. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுகிழமை) மாலை படத்தின் இன்னொரு புரமோ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அறிவித்தபடி நேற்று மாலை ‘பீஸ்ட்’ படத்தின் இன்னொரு புரமோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடுவது போன்ற போஸ்டரை வெளியிட்டிருந்தது. மேலும், அந்த போஸ்டரில் ‘அரபிக் குத்து’ பாடல் இன்று (திங்கட்கிழமை) வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அறிவித்தபடி ‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள ‘அரபிக்குத்து’ பாடலை அனிருத் பாடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

Previous articleஅதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ஆளுநர்! அந்த நிலை இங்கும் வரலாம்! எச்சரிக்கை மணி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!
Next article10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!