காதல் மனைவியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆரவ்! 

Photo of author

By Parthipan K

பிக்பாஸ் பிரபலமான ஆரவ் நேற்று முன்தினம் நடிகை ராஹிக்கும் சென்னையில் திடீரென்று திருமணம் செய்து  கொண்டார்.இந்த திருமணத்தில்  பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தனது காதல் மனைவிக்கு முதல் சத்தியத்தை செய்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஆரவ்.

தனது மனைவியை “இமைபோல் காப்பேன்!” இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவுடன் இந்தப் பதிவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆரவ் பிக்பாஸ் வீட்டில்  நடிகை ஓவியாவுடன்  நெருக்கமாக இருந்து காதலித்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகும் இருவரும் வெளியே ஊர் சுற்ற அப்போது தங்கள் செல்பி போட்டோக்கள் இணைய தளத்தில் பதிவிட்டு வந்தனர்.

இவர்கள் இருவரும் இன்னும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் ஓவியா ஆர்மியே  பதறும் அளவிற்கு திடீர் என்று ஆரவ் திருமணம் செய்து கொண்டார்.தற்போது ஆரவ் தனது காதல் மனைவியுடன் ஹனிமூன் சென்று தனது திருமண வாழ்க்கையை தொடங்கி விட்டார். இந்த தம்பதியர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.