அறுவை சிகிச்சை முடிந்த அர்ச்சனாவின் நிலை!! எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க!!
தொலைக்காட்சிக்கு முக்கியமாக இருப்பவர் அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை மக்களிடம் நல்லபடியாக, மேலும் அதை பொழுதுபோக்காகவும் கொண்டு செல்வது தொகுப்பாளர்களின் கடமை. அந்த வகையில் பிரபல ஜீ தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் இன்னாள் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் கடந்த வாரம் மூளையில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார். மேலும் அவரை பற்றிய செய்திகளை தகவல்களை அவரது மகள் சாரா தெரிவிப்பார் என்றும் அறிவித்திருந்தார். அதேபோல் அர்ச்சனாவின் மகள் சாராவும் அவ்வப்போது தகவல்களை தெரிவித்து வந்தார். மேலும் அவருக்கு மூளையில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க அவரது வலது காலில் இருந்து டிஷ்யூ எடுத்து மூளையின் ஓட்டையை அடைக்க உள்ளதாக சாரா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருந்தார். அர்ச்சனாவிற்கு அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து அவர் நன்றாக உள்ளார் என்றும் நல்லபடியாக வீடு திரும்பி உள்ளார் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து நேற்று அர்ச்சனாவின் யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது.
அந்த வீடியோவில் அர்ச்சனா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது மேலும் அறுவை சிகிச்சைக்காக உடன் இருந்த செவிலியர்கள் மற்றும் அறுவை சிகிச்சையை நல்லபடியாக முடித்துக் கொடுத்த மருத்துவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். தான் தற்போது நலமாக இருப்பதாகவும் மேலும் அவருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்ட காணொளி காட்சியை பார்த்த அவரின் ரசிகர்கள் நல்லபடியாக வீடு திரும்புவதற்காக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.