இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு!

0
319

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு!

இந்த உலகில் எப்பொழுதும் தெய்வங்கள் இல்லாத ஒரு இடம் என்று ஒன்று கிடையாது. கண்ணுக்கு தெரிந்தும் கண்ணுக்குத்தெரியாமலும் அண்டத்தில் கூட இந்த இறை சக்தி முழுமையாக நிறைந்து தான் இருக்கிறது. அதனால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது‌.

மேலும் நீங்கள் கடவுளை நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி. நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது அதனால் தான் இந்த பூமியில் உயிரினங்கள் வாழ்கிறது. என்பதையாவது நிச்சயம் நம்பி தான் ஆக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சக்தியை தான் இறைசக்தி என்று நினைத்து வழிபாடு செய்கின்றோம்.

இது தவிர ஒரு சில அறிகுறிகளை வைத்து கூட நாம் இறை சக்தியை உணர முடியும். வழக்கம்போல வீட்டில் பூஜை செய்து இறைவனிடம் வேண்டி கொண்டிருப்போம். திடீரென்று நம் வீட்டின் அருகிலோ அல்லது தூரத்திலோ இருக்கக்கூடிய கோவிலில் மணி சத்தம் கேட்கும்.

அந்த மணி சத்தம் கேட்கும் போது நாம் உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். அந்த நேரத்தில் நாம் தெய்வ சக்தி இருப்பதை உணர முடியும். கண்ணை மூடிக் கொண்டு சுவாமியை மனதார வேண்டிக் கொண்டிருப்போம் அப்போது கண்ணை திறந்து இறைவனைப் பார்த்த உடன் இறைவனின் தலையில் இருந்து பூ விழும் அல்லது எலுமிச்சம் பழம் கீழே விழும். அப்போது நம் உடல் சிலிர்த்து போகும். அந்த நேரத்தில் இறைவனை இருப்பதை உணரலாம்.

நம்முடைய வீட்டில் கற்பூரம் ஏற்றி இருக்க மாட்டோம்,தீபம் ஏற்றி இருக்க மாட்டோம், வாசனை மிகுந்த ஊதுவத்திகள் எதுவுமே ஏற்றிருக்க மாட்டோம் ஆனால் ஏதோ வேலையை செய்யும் பொழுது நம்மை அறியாமலேயே ஒரு நல்ல மனம் வீசும். உதாரணத்திற்கு விபூதி வாசம், சந்தன வாசம், பன்னீர் வாசம், பூக்கள் வாசம் நம்மை கடந்து செல்லும். அப்படி ஒரு உணர்வு ஏற்படும் பொழுது நமக்கு அப்படியே உடல் சிலிர்க்கும் அப்படி இருந்தால் அந்த இடத்தில் தெய்வ சக்தியை இருக்கின்றது.

சில நேரங்களில் நாம் சுவாமி கும்பிடும்போது ஏதோ ஒரு ரூபத்தில் உடுக்கை சத்தமோ மேல சத்தமோ அல்லது இறைவனுக்காக சமர்ப்பிக்கப்படும் இசை ஏதோ ஒன்று சத்தமாக ஒளிக்கப்பட்டு அந்த ஒளி நம் காதில் விழுந்து நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு உணர்வு தோன்றும். அந்த நேரத்தில் இறைவன் இருப்பதை உணரலாம்.

மேல் சொன்ன விஷயங்களை நிறைய பேர் உணர்ந்திருக்கலாம். சிலபேர் இதுதவிர இன்னும் நிறைய விஷயங்களில் அனுபவபூர்வமாக இறை சக்தியை உணர்ந்து இருக்கக்கூடிய அனுபவங்கள் இருக்கும்.

Previous article144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா?  
Next articleஎன் வழுக்கை தலைக்கு இந்த மூன்று விஷயங்கள் தான் காரணம் !! ரஜினியின் ஓபன் ஸ்லோ மோஷன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here