உடலில் சில இடங்களில் சம்மந்தம் இல்லாத நிறத்தில் காணப்படும்.குறிப்பாக கை,கால் முட்டியில் அதிக கருமை இருக்கும்.இந்த கருப்பு நிறம் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பாலோ செய்யுங்கள்.
கை கால் முட்டி கருமையாக காரணங்கள்:
1)இறந்த செல்கள்
2)சூரிய ஒளி
3)தோல் அலர்ஜி
4)வறண்ட சருமம்
5)கருமை சருமம்
6)காயம்
கை கால் முட்டி கருமையை குறைக்கும் டிப்ஸ்:
**மஞ்சள் பொடி
**ரோஸ் வாட்டர்
இவை இரண்டையும் தேவையான அளவு எடுத்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இதை கை கால் முட்டி பகுதியில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.அதன் பிறகு தண்ணீர் கொண்டு அவ்விடத்தை க்ளீன் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் கை கால் முட்டி கருமை நீங்கிவிடும்.
**கற்றாழை ஜெல்
**சர்க்கரை
ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.இதை கை கால் முட்டி மீது அப்ளை செய்து ஸ்க்ரப் செய்தால் கருமை நீங்கும்.
**எலுமிச்சை சாறு
**தேங்காய் எண்ணெய்
எலுமிச்சம் பழத்தின் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும்.இதை கை கால் முட்டி மீது தடவி வந்தால் கருப்பான இடத்தில் மாற்றம் ஏற்படும்.
**தயிர்
*ஓட்ஸ்
ஒரு தேக்கரண்டி தயிரில் ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் போட்டு ஊற வைக்க வேண்டும்.பிறகு இதை மசித்து கை கால் மூட்டு மீது தடவி நன்றாக தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் கருமை நீங்கிவிடும்.அதேபோல் தக்காளி பழத்தை அரைத்து சர்க்கரை சேர்த்து முட்டி மீது தேய்த்தால் கருமை நீங்கும்.