கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

0
167

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

 

ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து பூஜையறையில் வள்ளி தெய்வானை இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம். இவ்விரத்தத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விளக்கை மலை ஏற்றி விட்டு, பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

ஆவணி மாத சஷ்டி அன்று மாலையில் முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நெய்வேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்க, வீட்டின் திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். கடன் தொல்லைகள் குறையும் என்பது உறுதி.

உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சன்னிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.

பின்பு வீடு திரும்பியதும் பூஜையறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நெய்வேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

இந்த முறையில் ஆவணி மாத சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.

பொருளாதாரத்தில் உள்ள கஷ்டநிலை நீங்கும்.தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள்.உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

 

Previous articleஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கான செய்தி தான்!
Next articleதொடர்வண்டி டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டியா? யாருக்கெல்லாம் வரி கிடையாது?