திருமாவளவனின் மணிவிழா பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், நவாஸ் கனி, மேயர் இந்திராணி, சட்டசபை உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வைகோ பேசும்போது தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்து விட்டு இந்தியா என்ற பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கிறார்கள் என்று கூறினார்.
ஆனால் எப்போதுமே காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை அறவே பிடிக்காது.
ஆகவே இந்த கட்சியினர் தமிழகத்தில் கொண்டு இருந்த மிகப்பெரிய செல்வாக்கு காரணமாக, தமிழக மக்களுக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மீது வெறுப்புணர்வு உள்ளதை போன்ற ஒரு தோற்றத்தை இது நாள் வரையில் ஏற்படுத்தி வந்தனர்.
ஆனால் அதிமுக ஆட்சியிலிருந்த போது கூட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவைகளின் வளர்ச்சி தமிழகத்தில் சற்றே குறைவாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அசுர வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதன் மூலம் திமுக தன்னுடைய சந்தர்ப்பவாத அரசியலை கையில் எடுத்திருப்பதாக பலர் தெரிவிக்கிறார்கள்.
இத்தனைக்கும் பாஜகவின் கொள்கையும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையும் திமுகவிற்கு நேர் எதிராக இருக்கும். அப்படி நேர் எதிரான ஒரு இயக்கத்திற்கு பேரணி நடத்துவதற்கு தமிழகத்தில் எப்படி அனுமதி கிடைத்தது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற விழாவில் திருமாவளவன் பேசியதாவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பாஜக செயல்படுகிறது. ஜாதி மாறி திருமணம் செய்தால் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. சமூக பழிக்கு பயந்து சொந்த பிள்ளையை கொலை செய்கிறார்கள். அவர்களை மன நோயாளியாக சித்தரிக்கிறது சனாதனம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, இதுவரையில் ஆர் எஸ் எஸ் அமைப்பை ஏன் தடை செய்யவில்லை? அது என்ன ஜனநாயக இயக்கமா? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த சனாதன சக்திகளுடன் தான் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்திருக்கிறது. அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.
ஆனால் திருமாவளவன் கூறுவதைப் போன்று ஆணவக் கொலைகள் எதுவும் தற்போது நடைபெறுவதில்லை. அதற்கு மாறாக வேறு சமூக பெண் பிள்ளைகளை காதலிப்பதாக தெரிவித்து ஒரு சில சமூக விரோத கும்பல் தொந்தரவு செய்து வருகிறது.
அவர்களின் ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த பெண் பிள்ளைகளை கொடூரமாக தாக்கி கொலை செய்வது, முகத்தில் ஆசிட் வீசுவது, போன்ற சமூக விரோத செயல்களில் ஒரு சில கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது. இவையெல்லாம் திருமாவளவனின் கண்ணில் படவில்லையா? அல்லது கண்ணில் பட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா? என்று பலர் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
இந்த ஆர் எஸ் எஸ் அமைப்பு தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று திருமாவளவனை போன்றோர் ஏன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள் என்று யோசித்தால், அவர்களுக்கு பின்னால் இந்த சிறுபான்மையின மக்கள் ஒளிந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.
ஒருவேளை ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து விட்டால் சிறுபான்மையினர் என்று சொல்லிக் கொள்ளும் இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மத போதகம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களும், குற்றங்களும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதுதான் அப்பட்டமான உண்மை.
சில சிறுபான்மையின அமைப்புகள் மத போதகம் என்ற பெயரில் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்பது இங்குள்ள அரசியல் கட்சிக்கோ அல்லது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கோ தெரியாமல் இல்லை. ஆனால் ஓட்டு அரசியலுக்காக அதனை கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அப்படி அல்ல இது போன்ற தவறுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டுபிடித்தால் நிச்சயமாக தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும். ஆகவே தான் திருமாவளவனை போன்ற ஒரு சிலர் பின்னால் சிறுபான்மையினர் ஒளிந்து கொண்டு அவர் மூலமாக குரலெழுப்பி வருகிறார்கள்.