பகுதிநேர அரசு பணியாளர்கள் வேலை நிரந்தரமா? பட்ஜெட் தாக்குதலில் வெளிவரும் அறிவிப்புகள்!

Photo of author

By Rupa

பகுதிநேர அரசு பணியாளர்கள் வேலை நிரந்தரமா? பட்ஜெட் தாக்குதலில் வெளிவரும் அறிவிப்புகள்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கிய முதலே பல்வேறு திட்டங்களை ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவதாக இரண்டு மூத்த கட்சிகளும் கூறி வந்தது.அந்தவகையில் மக்கள் பத்தாண்டுகள் ஆட்சி அமைக்காத திமுக தற்பொழுது ஆட்சி அமைத்துள்ளது.அவர்கள் கூறிய அறிக்கையை சிலவற்றை தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை.நாளடைவில் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அவர்கள் கூறிய அறிக்கை பட்டியலில் கல்வி கடனை ரத்து செய்வதாக கூறினர்.மகளிருக்கு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என கூறினர்,இவ்வாறு பல அறிக்கைகள் கூறியும் திமுக அரசு இன்றளவும் நிறைவேற்றுவதில் தாமதம் செய்து வருகிறது.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேரத்தில் பணி புரியும் அரசு பள்ளி ஆசிரியர்களை வேளையில் நிரந்தரம் செய்வாதாக கூறினார்.

ஆனால் தற்போது வரை அது பற்றிய ஆணையை வெளியிடவில்லை.தற்போது அதுபற்றி பகுதி நேரத்தில் அரசு பள்ளிகள் பணிபுரியும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுபற்றி முதல்வர் பட்ஜெட் தாக்குதலில் பகுதி நேர அரசு ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலையை கொடுத்து ஆணையிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் தமிழக முதல்வரோ பட்ஜெட் தாக்குதலின் போது அது பற்றி எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதற்கு பதிலாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களான உடற்கல்வி,ஓவியம்,தொழிற்கல்வி ஆகியவர்களுக்கு 30% ஊதியத்தை உயர்த்தி 2500 அதிகரித்து தற்போது 10000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.இவர்களின் கோரிக்கை தற்பொழுது 10 ஆண்டுகள் வரை கேட்கப்பட்டு வருகிறது.இதில் பணியாற்றியவர்கள் பலருக்கு வயது 40-தை தாண்டியதால் வேறு வேலைக்கு செல்ல முடியாமல் தனது அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் இவர்கள் சார்பாக ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலையை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.கடந்த பாதண்டுகளாக நிறைவேற்றாத இந்த கோரிக்கையை தமிழக அரசு செயல்படுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.