தாவரங்கள் கனவில் உங்களைத் தேடி வருகின்றதா? என்ன பலனாக இருக்கும் இதோ பார்க்கலாம்!

Photo of author

By Parthipan K

தாவரங்கள் கனவில் உங்களைத் தேடி வருகின்றதா? என்ன பலனாக இருக்கும் இதோ பார்க்கலாம்!

Parthipan K

தாவரங்கள் கனவில் உங்களைத் தேடி வருகின்றதா? என்ன பலனாக இருக்கும் இதோ பார்க்கலாம்!

வில்வ இலை:வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும்.

முள் செடி:முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள். இருந்தாலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. புதிய பிரச்சனை உருவாகும். இருந்தாலும் அந்த பிரச்சனையால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளால் விரிசலும் ஏற்படாது.

மருதாணி:மருதாணியை கனவில் கண்டால் உங்கள் உடல்நலம் சீராகும்.

மலர்செடிகள்:மலர்செடிகள், பூந்தோட்டம் கனவிலே வந்தால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய போகின்றது என்று அர்த்தம்.

மரம்:மரம் ஏறுவது போல் கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு வரப்போகிறது என்று பொருள். அதை நழுவவிடாமல் புத்திசாலித்தனமாய் பயன்படுத்திக் கொள்வது நல்லது.