அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்!

Photo of author

By Hasini

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையில் பாதிப்புகள் கட்டுக்கு அடங்காமல் உள்ளதால், மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. அதன் பேரில் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து வருகிறது.

தற்போது நோய் தொற்று பல மாவட்டங்களில் குறைந்துள்ளதின் காரணமாக அந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகளை பின்பற்ற அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பொழுது பொதுமக்கள்‌ அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கில்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ நடைமுறையில்‌ இருந்துவரும்‌ நடமாடும்‌ காய்கறி, பழங்கள்‌ விற்பனை தொடர்புடைய துறைகள்‌ மூலம்‌ தொடர்ந்து நடைபெறும்‌.

மேலும்‌, மளிகைப்‌ பொருட்களை அந்தந்தப்‌ பகுதிகளில்‌ உள்ள மளிகைக்‌ கடைகளால்‌ வாகனங்கள்‌ அல்லது தள்ளுவண்டிகள்‌ மூலம்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ அனுமதியுடன்‌, குடியிருப்புப்‌ பகுதிகளுக்குச்‌ சென்று விற்பனை செய்யவும்‌, ஆன்லைன்‌ மற்றும்‌ தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்‌ கோரும்‌ பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 6 மணிவரை அனுமதிக்கபட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு வருகின்ற 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நேற்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. மேலும் மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

ஊரடங்கு தளர்வுகளில் டாஸ்மாக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அரசு அறிவிக்கவில்லை. மேலும் தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது என தமிழக அரசு கூறியுள்ளது.