உடல் வெள்ளையாக இருந்தாலும் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதி நிறம் குறைவாக தான் இருக்கும்.இந்த கருமை மறைய இந்த அழகு குறிப்புகளில் ஒன்றை செய்து பயனடையலாம்.
1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)டூத் பேஸ்ட் – சிறிதளவு
3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
4)பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி
முதலில் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் சிறிதளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை டூத் பேஸ்ட் உள்ள கிண்ணத்தில் பிழிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூளை அதில் கொட்டி நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடாவை அதில் போட்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் பூசு நன்கு உலர வைக்க வேண்டும்.கலவை நன்கு உலர்ந்து வந்த பிறகு அதை நீக்கிவிட வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் அக்குள் பகுதியில் உள்ள கருமை முழுமையாக நீங்கிவிடும்.
1)காபித் தூள் – ஒரு தேக்கரண்டி
2)வெள்ளை சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
ஒரு கிண்ணத்தில் காபித் தூள் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரையை கொட்டி கலந்துவிட வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு ஒன்றரை தேக்கரண்டி பன்னீர் அதாவது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதை அக்குள் பகுதியில் தடவி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வெது வெதுப்பான நீர் கொண்டு துடைத்து க்ளீன் செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் அக்குள் பகுதியில் உள்ள கருமை நீங்கிவிடும்.
1)வெள்ளை சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை சர்க்கரையில் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை அக்குள் பகுதியில் தடவி நன்கு உலர்ந்த பிறகு அதை நீக்கினால் கருமை மறையும்.