ஒவ்வொரு பெண்ணிற்கும் காதணிகள் அழகு சேர்ப்பவையாக உள்ளது.காதோரங்களில் ஜிமிக்கி ஆடும் பொழுது பெண்ணின் அழகு கூடுகிறது.ஆனால் எடை அதிகமான காதணிகளை அணிந்தால் காது துளைகள் பெரியதாகி கிழிந்துவிடும்.
தற்பொழுது பேஷன் என்ற பெயரில் பெண்கள் கனமான காதணிகளை அணிகின்றனர்.இதன் விளைவாக காது மடல் பெரியதாகுகிறது.காதுகள் மென்மையான உறுப்பு.குறிப்பாக காதணி அணியும் இடம் மென்மையாக இருக்கும்.நாம் கனமான காதணிகளை அணிவதால் அவ்விடத்தில் அதிக வலி ஏற்பட்டு புண்ணாக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் காது குத்தும் பொழுது செய்யும் சில தவறுகளால் விரைவில் ஓட்டை பெரியதாகிவிடுகிறது.
இதனால் காது துளைகளை அறுவை சிகிச்சை மூலம் அடைக்கும் நிலை ஏற்படுகிறது.சிலர் அழகு நிலையத்திற்கு சென்று கிழிந்த காது ஓட்டைகளை அடைக்க முயற்சிக்கின்றனர்.உங்கள் காது ஓட்டை நீண்டு இருந்தால் அதை சரி செய்வதற்கான டிப்ஸ் இதோ.
காது ஓட்டை நீள்கிறது என்றால் நீங்கள் இலகு ரக காதணிகளை அணியத் தொடங்குங்கள்.வீட்டில் உள்ள போது காதணிகள் அணிவதை தவிருங்கள்.குறிப்பாக எடை அதிகமுள்ள காதணிகளை தவிருங்கள்.
காது ஓட்டைகளை சுற்றி வைட்டமின் ஈ எண்ணையை அப்ளை செய்து வாருங்கள்.காது ஓட்டையை மறைக்க காதுமடல் பேட்சுகள் பயன்படுத்தலாம்.தற்பொழுது கிழிந்த காது ஓட்டைகளை மறைக்க பல பொருட்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
காது ஓட்டையில் புண்கள் மற்றும் தழும்புகள் இருந்தால் அதை சரி செய்ய வேப்பிலை மற்றும் மஞ்சள் கலவையை பயன்படுத்தலாம்.காது ஓட்டைகளில் உள்ள அழுக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.