அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு இவ்வளவு பயன்களா? முழு தகவல் இதோ!

0
175
Are there so many benefits to the youth in the Agnipath project? Here is the complete information!
Are there so many benefits to the youth in the Agnipath project? Here is the complete information!

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு இவ்வளவு பயன்களா? முழு தகவல் இதோ!

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

அக்னிபத்  திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவ வீரர்களின் வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கு பீகாரில் அக்னிபத் திட்டதின் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்காக கடந்த  சில தினங்களாக  போராடி வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து   நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்து. இந்தப் போராட்டமானது தென்னிந்தியாவுக்கும் பரவியுள்ளது.தெலுங்கானாவில் இந்த போராட்டம் வெடித்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டத்தால் 200 ரயில் சேவைகள் பாதிப்பு . மேலும் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்றரை காலம் முடிவிற்கு வரும் பொழுது மேலும் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் அதில் 25 சதவீதம் வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.மீதமுள்ள 75 சதவீத வீரர்கள் வெடிப்பு பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த 25 சதவீத வீரர்கள் நான்கு ஆண்டுகள் முழுவதும் பணியாற்றலாம் பணியின்போது அவர்களுக்கு காப்பீடு திட்டமாக 40 லட்ச ரூபாய் இலவசமாக வழங்கப்படும்.

இந்த நான்கு ஆண்டுகாலம் பணி முடிவிற்கு வரும்பொழுது பிடிப்பு பணமாக வழங்கப்படும் 10 – 12 லட்ச ரூபாயில் ஒரு லட்ச ரூபாய் மட்டும் ரொக்கமாக வாங்கிக்கொண்டு மற்ற பணத்தை வங்கி பத்திரமாக பெற்றுக்கொள்ளலாம். எனவும் மத்திய அரசு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.

Previous articleபாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை
Next articleநடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள் !