பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களாக இவங்க தானா?

0
103
#image_title

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களாக இவங்க தானா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் சுவாரசிய தகவல்  வெளியாகி உள்ளது.

பிரபல பொழுப்போக்கு தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள்முதல் 100 நாட்கள் மட்டும் தான் இந்நிகழ்ச்சி நடைபெறும். சர்ச்சையும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் பிரித்து விட முடியாது. சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் வாய்ப்பு இல்லாத நடிகர்கள், நடிகைகள் போட்டியாளராக பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பர். மேலும், பிரபலமானவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வார்கள்.

சில கோடி ரூபாய் பொருட் செலவில் செட் அமைக்கப்பட்டு பிக் பாஸ் போட்டி நடத்தப்படுகிறது. ஆனால் விளம்பரம் மூலம் பல கோடி ரூபாய் லாபமாக பிக் பாஸ் நிகழ்ச்சி சம்பாதித்து விடுகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 7வது சீசனுக்கும் அவர் தான் தொகுப்பாளர். இடையே ஒரு சிறு பகுதியை மட்டும் நடிகர் சிலம்பரசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் பிக் பாஸ் -7 நிகழ்ச்சியின் போட்டியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண் போட்டியாளர்களின் பட்டியலை பார்க்கலாம் :-

மாகாபா ஆனந்த், விஜே ரக்சன், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் பப்லு (என்ற) பிரித்திவிராஜ், காக்கா முட்டை விக்னேஷ், சந்தோஷ் பிரதாப், அகில், ஸ்ரீதர் மாஸ்டர், சீரியல் நடிகர் தினேஷ் உள்ளிட்ட பேருக்கு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இது மாறுதலுக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. பிக்-பாஸ் போட்டியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K