8 வது படித்தவர்களா நீங்கள்!!? இதோ உங்களுக்கு 30000 சம்பளத்துடன் தமிழக அரசில் வேலை!!!
8வது படித்தவர்களுக்கு மாதம் 30000 வரை சம்பளத்துடன் கூடிய தமிழக அரசின் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. என்ன வேலை, எவ்வாறு விண்ணப்பிப்பது, கடைசி தேதி என்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தின் சமூக நலத்துறை அலுவலகம் தற்பொழுது வேலை வாய்ப்பு குறித்த புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அங்கு காலியாக இருக்கும் சென்டர் அட்மின்ஸ்டேரட்டர், சீனியர் கவுன்செல்லர், கேஸ் வொர்க்கர், ஐடி அட்மின், செக்யூரிட்டி, மல்டி பர்ஸ் ஹெல்பர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்படவுள்ளனர். இந்த வேலை வாய்ப்பு குறித்து மற்ற விவரங்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வேலை பற்றிய விவரங்கள்…
நிறுவனத்தின் பெயர் :
கதவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது.
வேலையின் பெயர் :
கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக இருக்கும் சென்டர் அட்மின்ஸ்டேரட்டர், சீனியர் கவுன்செல்லர், கேஸ் வொர்க்கர், ஐடி அட்மின், செக்யூரிட்டி, மல்டி பர்ஸ் ஹெல்பர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கல்வித்தகுதி :
விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி, எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.எஸ்.டபள்யூ, ஐடி, பட்டப்படிப்பு டிப்ளமோ வித் கம்பியூட்டர் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
இந்த பணியில் சேர விரும்புவர்கள் குறைந்தது 21 வயது உள்ளவராகவும் அதிகபட்சமாக 40 வயது உடையவராகவும் இருக்க வேண்டும்.
சம்பளம் :
பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு 6400 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியான நபர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கதவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி :
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://coimbatore.nic.in/ notice_category/recruitment/ இந்த இணையதள முகவரியை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.