பன்னிரெண்டாம் வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை!
தற்பொழுது தொற்று பாதிப்பு முடிந்த பிறகும் மக்கள் அதிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி பெருமளவு தவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய புள்ளியல் அலுவலகம் தொழிலாளர் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் நகர்ப்புற மற்றும் அனைத்து பகுதிகளிலும் வேலை இன்றி இருப்பவர்கள் எண்ணிக்கை விகிதம் பட்டியலில் கூறியுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விகிதம் பட்டியல் ஆனது 2020 முதல் இருபத்தி ஒன்றாம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 9.4 சதவீதமாக இருந்தது. தற்பொழுது ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் 22.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உட்பட 11 மாவட்டங்களில் வேலை இல்லாமல் இருக்கும் எண்ணிக்கை 9 சதவீதத்திற்கும் மேல் காணப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் மத்திய அரசு தற்போது புதிய வேலை வாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு தேர்வுக்கான தேதியை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். மேலும் இத்தேர்வில் பங்கேற்பவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்த காலியிடங்கள் 72 ஆக உள்ளது.பணி: ASI (DM Grade-‘)
சம்பளம்: ரூ. 29 ஆயிரத்து 200 முதல் தொண்ணூற்று இரண்டாயிரத்து முன்னூறு வரை.
பணி:Hc (Carpenter)_04
சம்பளம்: ரூ 25 ஆயிரத்து 500 முதல் 83 ஆயிரம் வரை.
பணி:HC(Plumber)_02
பணி:Constable(sewerman)02
பணி:Constable(general operator) 24
பணி:Constable(generator machine)28
பணி:Constable(linemen)11
சம்பளம்: ரூ 21 ஆயிரத்து 700 முதல் 59 ஆயிரத்து 500 வரை.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள். அவற்றில் பன்னிரண்டாம் வகுப்பு படுத்திருப்பது முதல் தகுதி என கூறியுள்ளனர். மேலும் சில பணிகளுக்கு கூடுதல் படிப்புகள் தேவை எனவும் கூறியுள்ளனர். இந்த பணிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு திறன் தேர்வு உடல் தேர்வு போன்ற அடிப்படையில் தேர்வு செய்வர் என்றும் கூறியுள்ளனர். https://rectt.bsf.gov.in இன்று இணையத்தின் மூலம் இத்தேர்வுக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.12 .2021 ஆகும்.