நீங்கள் தினமும் நான்-வெஜ் மட்டுமே சாப்பிடுபவரா? அப்போ அதில் ஒழிந்திருக்கும் ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க!!

Photo of author

By Rupa

 

இன்று பலர் அசைவ விரும்பிகளாக மாறி வருகின்றனர்.அசைவ உணவுகள் சாப்பிடாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று சொல்பவர்கள் அதை தினமும் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளில் புரதச்சத்து,கொழுப்புச் சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்திருக்கிறது.நீங்கள் தினசரி உணவாக அசைவத்தை எடுத்துக் கொள்ளும் போது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து இதய நோய்,சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

தினசரி அசைவம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து உடல் எடையை கூட்டிவிடுகிறது.இதனால் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.மீன்,இறால் போன்ற நீர்வாழ் அசைவ உணவுகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால் எவ்வித பாதிப்புகள் ஏற்படாது.மீன்களில் ஒமேகா 3 கொழுப்புகள் அதிகம் நிறைந்திருக்கிறது.இதை சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆனால் சிவப்பு இறைச்சி,பிராய்லர் கோழி இறைச்சியை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து மாரடைப்பு,உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.கொழுப்புச்சத்து அதிகம் உள்ள அசைவங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் இரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு குறைந்து கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிடும்.இதனால் பக்கவாதம்,இதய துடிப்பு நின்று போதல் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.எனவே அளவிற்கு அதிகமாக அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.