நீங்கள் அரசு பள்ளி மாணவரா? உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கன்பார்ம்!!

0
334
Are you a government school student? 1000 per month stipend for you Kanform!!
Are you a government school student? 1000 per month stipend for you Kanform!!

நீங்கள் அரசு பள்ளி மாணவரா? உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கன்பார்ம்!!

நடப்பு 2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் +1 பயிலும் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ள திறனாய்வுத் தேர்விற்கு தகுதி வாய்ந்த +1 மாணவர்கள் ஜுன் 11 முதல் 26 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது.

இந்த திறனாய்வுத் தேர்வின் மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.நடைமுறையில் இருக்கின்ற இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என்று மொத்தம் 1000 பேருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.ஒவ்வொரு கல்வியாண்டிலும் 10 மாதங்களுக்கு 10000 என்று இளங்கலை பட்டப்படிப்பு வரை மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

தமிழக அரசு பாடத் திட்டங்களான 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் இடம்பெற்றுள்ள கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடத் திட்டங்களை கொண்டு முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.முதல் தாளில் கணிதம்,இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வினாக்கள் என்று இரு தாள்களிலும் 60 கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்

ஜூலை 21 காலை 10 மணி முதல் 12 மணி வரை முதல் தாளும்,மதியம் 2 மணி முதல் 4 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெறுகிறது.தேர்வு எழுத உள்ள மாணவர்கள் திறனாய்வுத் தேர்விற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு ரூ.50 கட்டணத் தொகையுடன் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது.