டிகிரி முடித்து வேலையில்லாமல் திண்டாடுபவரா? நிதித்துறையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு நிதி துறையானது (TN Finance Department) வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Intership programme பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு நிதித்துறையில் (TN Finance Department) காலியாக உள்ள பணிக்கு என 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Intership programme பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Economices, Financial, Law, Commerce, Management போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பித்தவர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் Online Assessment (Computer- Besed Test) மற்றும் personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பித்தவர்களுக்கு மாதம்தோறும் ரூ.20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 01.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் ஆர்வம் உள்ள மற்றும் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.