என்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்… 100000 மாதச் சம்பளத்தில் உங்களுக்கு அசத்தலான வேலை!!

0
106

 

என்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்… 100000 மாதச் சம்பளத்தில் உங்களுக்கு அசத்தலான வேலை…

 

இன்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்த அனைவருக்கும் மாதம் 100000 வரை சம்பளத்தில் அசத்தலான வேலை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் நிறுவனம் இந்த வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 40000 முதல் 100000 வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் NRTPR என்று அழைக்கப்படும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இரேஜிந்திர நகர் பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அதற்கான விபரங்கள் பின்வருமாறு

 

* காலியிடங்கள் :

 

என்.ஆர்.டி.பி.ஆர் நிறுவனத்தில் மொத்தம் 24 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

* பணியின் வகை :

 

கன்சல்டன்ட் பணியில் 19 காலிப் பணியிடங்களும், அக்கவுண்ட்ஸ் அன்ட் டிரெய்னிங் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோஆர்டினேட்டர் 5 காலிப் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

* வயது வரம்பு:

 

கன்சல்டன்ட் பணிக்கு அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்கவுண்ட்ஸ் மற்றும் டிரெய்னிங் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோஆர்டினேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

* பணிக்காலம்:

 

ஒப்பந்தம் அடிப்படையிலான இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றநு. கன்சல்ட்டன்ட் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 2 ஆண்டுகளும், டிரெய்னிங் அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோஆர்டினேட்டர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

 

மாதச் சம்பளம்:

 

கன்சல்ட்டன்ட் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். டிரெய்னிங் பணிக்கு துர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக 40000 ரூபாய் வழங்கப்படும்.

 

கல்வித் தகுதி:

 

கன்சல்ட்டன்ட் பணிக்கு மாஸ்டர் டிகிரி, பி.இ, பி.டெக் பிரிவில் கம்பியூட்டர் இன்ஜினியரிங், ஐடி இதில் ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

 

பணியில் விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 16.8.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை…

 

இந்த இரண்டு பணிகளுக்கும் http://career.nirdpr.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 

Previous articleஇந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி… தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்… 
Next articleமுருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்!!