முருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்!!

0
33

 

முருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்…

 

முருங்கைக் காயின் விலை திடீரென்று குறைந்ததால் விவசாயிகள் அனைவரும் வேதைனயில் மூழ்கியுள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கைக் காய் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் முருங்கைக் காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசபிள்ளைப்பட்டி, கப்பலப்பட்டி, ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, சாமியார்புதூர், சாலைப்புதூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செடி முருங்கை அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது முருங்கை காயின் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு முருங்கைக் காய் வரத்து அதிகமாக இருக்கின்றது.

 

இதையடுத்து ஒரு கிலோ முருங்கைக் காயின் விலை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கிலோ 12 ரூபாய் என்பது முருங்கைக் காயை விளைவிக்க ஆகும் செலவை விட குறைவு என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

 

ஒரு கிலோ முருங்கைக் காய் 20 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டால் தான் இலாபம் கிடைக்கும். இதனால் முருங்கைக் காய்க்கு நிரந்தர விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.