இரவு நேரத்தில் பால் குடிப்பவரா நீங்கள்?? மக்களே ஆபத்து.. டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Selvarani

இரவு நேரத்தில் பால் குடிப்பவரா நீங்கள்?? மக்களே ஆபத்து.. டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

பால் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.இருப்பினும் எதை எந்த நேரத்தில்,எப்போது குடிக்க வேண்டும் என்பதும் அவசியமான ஒன்று.அந்த வகையில் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் பலரிடமும் உண்டு.இது நல்ல பழக்கமா?

 

பாலில் கால்சியம்,சோடியம்,புரோட்டின், வைட்டமின் A,K மற்றும் B12,கொழுப்பு, அமினோ ஆசிட், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் என பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

 

மருத்துவர்கள் இரவு பால்குடிப்பது நல்லதல்ல என்கின்றனர்.ஏனெனில் பாலில் உள்ள லாக்டோஸ் சற்று சர்க்கரை நிறைந்தது. எனவே இரவு படுக்கைக்கு முன் பால் குடிப்பது நல்லதல்ல. அதோடு நுரையீரல் இரவு நேரத்தில் தான் நச்சு நீக்கி வேலைகளை செய்யும். அந்த சமயத்தில் ஹெவியான பால் அருந்துவிட்டு படுக்கும்போது அதன் வேலையை மடைமாற்றம் செய்வதாக இருக்கும்.பின் அது நச்சு நீக்கம் செய்யாமல்,அருந்திய பாலை செரிமானிக்க வைத்து அதன் ஊட்டச்சத்துக்களை பிரித்து அனுப்பும் வேலைகளில் இறங்கி விடும்.பகலில் உங்கள் உடலும் ஆற்றலில் இருக்கும். பால்குடிப்பதும் உடனே செரிமானம் அடைந்து விடும்.எனவே பகலில் பால் குடிப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

 

இரவில் அதிகமாக பால் குடிப்பது உடலில் கொழுப்பு சேர காரணியாக அமையலாம். உடல் பருமனாக இருப்பவர்கள் கட்டாயம் இரவில் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.சிலருக்கு இரவு பால் குடிப்பது செரிமான சிக்கல்களை உண்டாக்கும்.

 

பால் என்பது ஒருவகையில் மயக்கத்தை கொடுக்கிற பாடம் வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம் ஆனால் உடலில் கொழுப்பு சத்து மிகுந்தவர்கள்,உடல் இளைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள்,உடல் உழைப்பு நிறைய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.