தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு புதிதாக ரேசன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இதனால் புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் பணியை தமிழக அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது.கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்காததால் தமிழக அரசு கோரிக்கை வலுக்கத் தொடங்கியது.
பிறகு புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கிய நிலையில் மேலும் மக்களை தேர்தல் காரணமாக அவை நிறுத்தப்பட்டிருந்தது.இதனால் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனர்கள் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்பொழுது விண்ணிப்பித்த 2.8 லட்சம் பேருக்கு புதிதாக ரேசன் கார்டு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.புதிதாக திருமணம் ஆனவர்கள்,புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பதித்த தகுதியான பயனர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
புதிதாக ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் சிலர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.அதேபோல் அரசு நிதியுதவி மற்றும் பென்ஷன் பெறும் பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.