நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 பெற உடனே இதை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 பெற உடனே இதை செய்யுங்கள்!!

நம் நாட்டில் மத்திய அரசு பெண்களுக்கென்று பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக “ஜனனி சுரக்ஷா யோஜனா” உள்ளது.

இந்த ஜனனி சுரக்ஷா யோஜனா கடந்த 2005 இல் தொடங்கப்பட்டவையாகும்.கர்ப்பிணி பெண்கள் போதிய நிதி இல்லாத காரணத்தினால் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.இதனால் குழந்தை பிறக்கும் பொழுது அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகி விடுகிறது.சில சமயம் பிரசவத்தின் போது தாய் மற்றும் சேய் இறக்க நேரிடுகிறது.இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க,குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் அவர்களை பராமரிக்க போதிய நிதி வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசானது,பிரசவித்த பெண்களின் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரத்தை செலுத்தி வருகிறது.

ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்திற்கான தகுதிகள்:

1)வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் கர்ப்பிணி பெண்கள்,தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்,பழங்குடியின பெண்கள் இத்திட்டத்திற்கு தகுதியானார்கள் ஆவர்.

2)பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு பிரசவத்திற்கு இந்த திட்டத்தின் மூலம் பண உதவி பெற முடியும்.

ஜனனி சுரக்ஷா யோஜனா நன்மைகள்:

1)இத்திட்டத்தின் மூலம் ஹோம் டெலிவரி குறைக்கபடுகிறது.

2)வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கர்ப்பிணிகளுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கிறது.

3)தாய்,சேய் இறப்பு இதன் மூலம் குறைக்கப்படுகிறது.

குறிப்பு:-

அரசு உரிமம் பெற்ற மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.