SBI HDFC ICIC ஆகிய வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்! இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!
அனைத்து வங்கிகளிலும் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் அவர்களின் பணம் பாதுகாப்பிற்காக பல வசதிகளை பெற்று வருகிறார்கள். அதேபோல வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனங்களை நிறுவியுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட அளவு இருப்பு தொகையை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கும் இருப்பு தொகையானது வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக, கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஆயிரம் ரூபாயும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 2000 ரூபாயும், மெட்ரோ நகரத்தில் உள்ளவர்கள் 3 ஆயிரம் ரூபாயும் வைத்திருக்க வேண்டும். அதேபோல எச்டிஎப்சி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் இருந்தால் அவர்கள் 10,000 வரையும், அரைநகர்புறங்களில் உள்ளவர்கள் ஐயாயிரம் ரூபாயும் வைத்திருப்பது கட்டாயம். அதேபோல ஐசிஐசி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், மெட்ரோ நகரங்களில் இருப்பவர்கள் பத்தாயிரம் ரூபாயும், அரை நகர் புறங்களில் இருப்பவர்கள் ரூ 5000 ரூபாயும் இருப்பது கட்டாயம் எனக் கூறியுள்ளனர்.