நீங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியா? அப்போ ரூ.1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Rupa

நீங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியா? அப்போ ரூ.1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள் பணத் தடையின்றி உயர்கல்வி மேற்கொள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண்” என்ற திட்டத்தை சமூக நலத்துறை மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் வாயிலாக அரசுப்பள்ளியில் பயின்ற லட்சணக்கான மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த புதுமை பெண் திட்டத்தை அரசு விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி அரசு பள்ளி மாணவிகள் மட்டும்மல்ல இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது

நடப்பு கல்வியாண்டில் இருந்து இந்த திட்டம் விருப்படுத்தப்பட்டுள்ளது.அரசு உதவிப் பெறும் பள்ளியில் பயின்று உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரியின் சிறப்பு அலுவலர்கள் மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அந்தவகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில்(புதுமைப் பெண் திட்டம்) மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் மாணவிகளின் கல்வித் தரம் உயர்வதோடு குழந்தை திருமணமும் தடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் அரசுப் பள்ளியில் பயின்று 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பை தொடர புதுமைப் பெண் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ்,RTE மூலம் 6 முதல் 8 வகுப்பு வரை தனியார் பள்ளியில் பயின்று பின்னர் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பயின்ற மாணவிகளும் இந்த புதுமைப் பெண் திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்