நீங்கள் நடந்து முடிந்த +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரா? மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?
அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு என்று தமிழக அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.மாணவ,மாணவியரின் கல்வி தரம் உயர அவர்களை பல வகைகளை தமிழக அரசு ஊவிக்கித்து வருகிறது.6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு என்று “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்” என்ற திட்டத்தின் கீழ் தமிழக அரசு மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2024-2025 நிதியாண்டிற்க்குனா தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் அவர்களது வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த மார்ச் 1 தேதி தொடங்கி மார்ச் 22 அன்று நிறைவடைந்த +2 பொதுத் தேர்விற்கான முடிவுகள் நேற்று அதாவது மே 6 அன்று வெளியானது.இந்நிலையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட உள்ளது.நீங்கள் கல்லூரியில் சேர்ந்த பின்னர் அதற்கான ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும்.பின்னர் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் தமிழக அரசானது மாதந்தோறும் ரூ.1000த்தை ஊக்கத் தொகையாக உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும்.