பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
137
Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!
Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்!

இரண்டு ஆண்டுகளாக  கொரோனா தொற்று தொடர்ந்து மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவித்து வந்தனர். அத்தொற்றிருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய வைக்கிறது. இவ்வாறு மாறி மாறி மூன்று ஆண்டுகளாக மக்கள் பெரும் இழப்பை சந்தித்துவிட்டனர். இவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாகியும் சரிவர நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் இருந்தது. ஒன்று அல்லது இரண்டு மாதகாலம் நேரடி வகுப்புகள் நடத்தப் பட்டால் அடுத்த மாதம் தொற்று பாதிப்பு அதிகரித்து மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடும் நிலைக்கு வந்துவிடுகிறது.இவ்வாறு இருக்கையில் இரண்டு ஆண்டுகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்காமல் போனது. இம்முறையும் பொதுத்தேர்வு நடைபெறாது என்று பலர் கூறிவந்தனர். சிறார்களுக்கும் தடுப்பூசி தற்பொழுது செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் தொற்று பாதிப்புக்கள் பெருமளவில் காணப்படாது.

எனவே இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக கூறிவந்தார். அவர் கூறி வந்தது போலவே சில தினங்களுக்கு முன்பு பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதில் மே மாதம் 5 ஆம் தேதியிலிருந்து 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இவ்வாறு இருக்கையில் அடுத்த மாதம் ,முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அன்பில் மகேஷ் தற்பொழுது கூறியுள்ளார்.

மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்கம் கூறியுள்ளது. தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.

Previous articleநீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க!
Next articleமீண்டும் முதல்வர் ஆகிறார் யோகி ஆதித்யநாத்! உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக!