தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 

0
300
#image_title

தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 

11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

இதைப் பற்றி அரசு தேர்வுகள் இயக்கம் கூறியுள்ளதாவது,

இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். இதில் நேரடியாக பள்ளியின் மூலம் தேர்வு எழுதுபவர்களுடன் தனித்தேர்வர்களும் அடங்குவர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் பற்றிய அறிவிப்பை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

11, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கு வருகின்ற 28ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட இருக்கிறது.

அதன்படி 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் பிப்ரவரி 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

எனவே தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தேவையான விவரங்களை அதே இணையதள பக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Previous articleகல்லூரி டீனுக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு! 
Next articleநாளை நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 மெயின் தேர்வுகள்!