ஓவர்டைம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கு பயனுள்ள செய்தி! மத்திய அரசு செயலாக்கும் திட்டம்!
பெரும்பாலும் பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் துணி கடைகள் போன்றவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உட்கார கூட நேரம் இல்லை மற்றும் அவர்கள் ஓய்வெடுக்க ஒரு இடம் கூட இல்லை என்பது வருந்த தக்க விஷயம் ஆகும்.
அவர்கள் வேலை நேரத்தில் உட்காரவே கூடாது என்பது பெரும்பாலும் பல பிரபல துணி கடைகளில் உத்தரவாகவே உள்ளது. நாம் துணி வாங்க செல்லும் போது அந்த தொழிலாளர்கள் படும் அவஸ்தையை பெரும்பாலும் நாமும் கண் கூடாக பார்க்க நேர்கிறது. அதிலும் பெண் தொழிலாளிகள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
இந்த கஷ்டங்களை போக்கவே, மத்திய அரசு விரைவில் தொழிலாளர் விதிகளை மாற்ற உள்ளது. இந்த விதிகளை அமல்படுத்தும் போது, வேலை நேரம் முதல் கூடுதல் நேரம் வரை விதிகளில் மாற்றம் இருக்கும். மேலும் புதிய வரைவு சட்டத்தில் அதிகபட்ச வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த முன்மொழியப்பட்டது.
இதனுடன், 30 நிமிடங்களை கணக்கிடுவதன் மூலம், அதாவது கூடுதல் வேலையை 15 முதல் 30 நிமிடங்கள் என்றாலும் அதை ஓவர் டைமில் சேர்க்க புதிய சட்டங்களில் விதிகள் உள்ளன. இது வேலை செய்யும் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்போதைய விதிகளின்படி, 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் கூடுதல் நேரமாக (over time) கணக்கிடப்படவில்லை. ஆனால் வரும் வரைவு விதிகளில், 30 நிமிடங்களை கணக்கிடுவதன் மூலம் கூடுதல் வேலையை 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஓவர் டைம் சேர்க்க ஒரு விதி உள்ளது. மேலும் இந்த புதிய வரைவு விதிகள் எந்தவொரு பணியாளரும் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணியாற்ற தடை விதித்துள்ளன.
ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்குப் பிறகும் அரை மணி நேர இடைவெளியைக் ஊழியர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் புதிய விதிகளின்படி, அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், இது பெரும்பாலான ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் சட்டங்கள் கூறுகின்றன. அடிப்படை சம்பளம் அதிகரிப்பதால், வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றில் கழிக்கப்படும் தொகை அதிகரிக்கும். இது டேக் ஹோம் சம்பளத்தைக் குறைக்கும்.
வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றின் பங்களிப்பு அதிகரிப்பதால், ஓய்வுக்குப் பிறகு பெறப்பட்ட தொகை அதிகரிக்கும். பி.எஃப் மற்றும் கிராச்சுட்டி அதிகரிப்பதுடன், நிறுவனங்களின் விலையும் அதிகரிக்கும். ஏனெனில் அவை ஊழியர்களுக்கான பி.எஃப்-க்கு அதிக பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும். இந்த விதிகள் ஒத்திவைக்கப்பட்டதற்கு இதுவே காரணம்.
இந்த விதிகள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், மாநில அரசுகளும் மற்றும் நிறுவனங்களும் இந்த விதிகளுக்கு தயாராகாத காரணத்தினால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை விரைவில் செயல்படுத்த மோடி அரசு விரும்புகிறது.