சமந்தாவின் ரசிகர்களா நீங்க!! அவங்க செய்யும் அட்டூழியங்களை பாருங்க!!

Photo of author

By CineDesk

சமந்தாவின் ரசிகர்களா நீங்க!! அவங்க செய்யும் அட்டூழியங்களை பாருங்க!!

சமந்தாவின் அழகிய சிரிப்பிற்கு அடிமையாகாத ரசிகர்களே கிடையாது.. மேலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். மேலும் இவர் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பட நடிகரின் மகனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களையும் தன் வசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டிலும் கால் தடம் பதித்துள்ளார்.

சமந்த ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் ஆதரவளித்து வருகின்றனர். மேலும் தற்போது இவர் சகுந்தலம் மற்றும் காத்துவாக்குல இரண்டு  காதல் என்ற படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் அவர் பொதுவாகவே வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் கூட இவரின் போட்டோ ஷூட் ஒன்று ரசிகர்களால் பகிரப்பட்டு வலைதளத்தில் வைரல் ஆகி வந்தது.

மேலும் தொடர்ந்து பிசியாக படங்களை நடித்து வரும் நிலையில் தற்போது குடும்பத்துடன் நேரங்களை செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது, மாடி தோட்டத்தை கவனித்துக் கொள்வது போன்ற பல ரிலாக்ஸிங் வேலைகளை செய்து வருகிறார். தற்போது இவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அவர் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் குட்டியுடன் பலூன் வைத்து துள்ளி குதித்து விளையாடும் வீடியோ ஆகும். மேலும் இந்த வீடியோ இவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அதிக அளவில் பல லட்சம் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.