நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது உண்மையிலேயே சாதாரண காரியம் இல்லை. எவ்வளவு பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் தூசிகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமது வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும் கூட சில பொருட்களை விசேஷ நாட்கள் அல்லது விழா நாட்களில் மட்டுமே சுத்தம் செய்வோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் நமது வீட்டின் சீலிங் ஃபேன்.
இவ்வாறு விசேஷ நாட்களில் மட்டுமே இந்த ஃபேனை சுத்தம் செய்வதால் அதிகப்படியான குப்பைகள் அதில் படிந்து இருக்கும். அதனை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகவும் இருக்கும். எனவே அதற்கான ஒரு சில எளிய வழிமுறைகளை பற்றி காண்போம்.
1. தலையணை உறை: பொதுவாக சீலிங் ஃபேன் சுத்தம் செய்யும் பொழுது அதில் உள்ள தூசிகள் நமது வீட்டின் தரையிலோ அல்லது நமது முகத்திலோ விழும். அவ்வாறு ஏற்படுவதை தவிர்க்க தலையணை உறையை பயன்படுத்தலாம்.
நமது வீட்டில் உள்ள பழைய தலையணை உறையை எடுத்துக்கொண்டு அதனை சீலிங் ஃபேன் ரெக்கைகளை கவர் செய்யுமாறு பொருத்திக்கொண்டு சற்று அழுத்தமாக தலையணை உரையை பிடித்துக் கொண்டு ரெக்கையை சுத்தம் செய்யும்படி வெளியே இழுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது ஃபேனில் உள்ள தூசிகள் தலையணை உறைக்குள் விழுந்து விடும். அதன் பிறகு ஒரு ஈரத் துணியை கொண்டு பேனை லேசாக துடைத்தாலே புதிய ஃபேன் போல மாறிவிடும்.
2. VACUUM கிளீனர்: வேக்கம் கிளீனர் ஐ நமது நாட்டில் அதிகம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ வெளிநாடுகளில் அதிகம் இதனை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த வேக்கம் கிளீனர் ஐ கொண்டு நமது சீலிங் ஃபேனையும் சுத்தம் செய்யலாம். ஒரு குச்சியில் வேக்கம் கிளீனரை பொருத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக நமது முகத்தை ஒரு துணியால் மூடிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குப்பைகள் நம் மீது விழாது. இப்போது வேக்கம் கிளீனர் ஐ ஆன் செய்து பாதுகாப்பான முறையில் நமது பேனை சுத்தம் செய்து கொள்ளலாம்.
3. சாக்ஸ்: நமது வீட்டில் பழைய சாக்ஸ்கள் நிறைய இருக்கும். அதனைக் கொண்டும் நமது ஃபேனை சுத்தம் செய்யலாம். சாக்ஸினை நீரில் நனைத்து சீலிங் ஃபேன் இன் ரெக்கை மீது வையுங்கள். தற்போது சாக்ஸின் இரு முனைகளையும் தங்களது இரு கைகளால் பிடித்துக் கொண்டு மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால் நமது ஃபேன் பளிச்சென்று மாறிவிடும்.
4.Cobweb brush: இந்த பிரஷ் இருந்தால் சீலிங் ஃபேனை மிகவும் எளிமையாக சுத்தம் செய்து விடலாம். நமது வீட்டில் உள்ள ஒட்டடை மற்றும் தூசிகளை சுத்தம் செய்ய எளிமையாக இருக்கும். நீளமான குச்சி ஒன்றில் இந்த பிரஷை கட்டி ஃபேன் இன் ரெக்கையை சுத்தம் செய்யுங்கள். இதுநாள்வரை சீலிங் ஃபேன் ஐ சுத்தம் செய்ய கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் உபயோகமாக இருக்கும்.