உங்களது இரக்க குணத்தால் ஏமாந்து விட்டீர்களா!! இனி சரி செய்து கொள்ளுங்கள்!!
கருணை இல்லம் என்பது கருணையின் அடிப்படையில் இயங்கப்படுகின்ற ஒன்றாகும். பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என்று யார் ஆதரவும் இன்றி இயங்கப்படுகின்ற ஒரு இல்லம் தான் கருணை இல்லம்.
கருணை இல்லத்தில் முதியவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் போன்ற அனைத்து ஆதரவற்றோர்களும் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் ஆதரவு தரும் வகையில் சமூக தொண்டாற்றுபவர்கள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள் இவர்களால் அமைக்கப்பட்டது.
இவற்றிற்கு பொதுமக்கள் பலர் தங்களால் இயன்ற உணவு உடை உடமை பொருள் பணம் போன்ற பலவற்றை கொடுத்து உதவுகின்றனர்.
இப்படி ஆதரவற்றோருக்கும் உதவி செய்வது வருகின்றனர். இதனை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் நவீனமான திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது ஒருவரை எந்த வகையில் ஏமாற்றினால் அவர் ஏமாறுவார் என்று நன்கு தெரிந்து கொண்டே சிலர் செயல்படுகின்றனர் அதில் ஒன்றுதான் இந்த கருணை இல்லம்.
இன்றைய தலைமுறையில் ஆதரவற்றோர்களுக்காக பணம் திரட்டுகின்றோம் உங்களால் இயன்ற பணத்தை தாருங்கள் என்று பொய்யாக கூறி நம்மிடமிருந்து சிலர் பொருளையோ அல்லது பணத்தையோ பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.
இதை அறியாத நபர்கள் ஆதரவற்றோர்களுக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று நினைத்து பணம் கொடுத்து விடுகின்றனர்.
ஆகையால் ஒவ்வொருவரும் தங்கள் கொடுக்கும் பணம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு செல்கிறதா என்பதை தெரிந்து கொண்டே பணம் கொடுக்க வேண்டும்.
அப்படி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னவென்றால்,முதலில் அந்த கருணை இல்லம் சட்டபூர்வமாக ரெஜிஸ்டர் பண்ணப்பட்டிருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
பின்பு நம்மிடம் உதவி கேட்டு வரும் அந்த நபரிடம் உங்களது இல்லத்தில் எத்தனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளார்கள் என்பதையும் கேட்க வேண்டும்.
இதுவே நீங்கள் 1000 , 10000 என்ற பெரிய அளவில் பணம் கொடுக்க நினைத்தால் நேரில் சென்று கொடுப்பது மிகவும் நல்லது.
மேலும் இந்த இல்லம் NGO DARPAN என்ற அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். NGO DARPAN என்பது அரசு சாராத ஒரு அமைப்பாகும். இது பொதுமக்கள் மற்றும் அரசிற்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகின்றது.
இவற்றையெல்லாம் கேட்கும் பொழுது அந்த நபர் சரியாக பதிலளித்தார் என்றால் பணம் கொடுங்கள்.நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்பது சரிதான் ஆனால் அந்த உதவி சரியான இடத்திற்கு செல்கிறதா என்பதை தெரிந்து கொண்டுசெய்யுங்கள்.