வாட்ஸ்அப்பில் “கேஸ் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும்” என்ற மெசேஜ் வருதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!
உலகம் ஒருபுறம் டெக்னலாஜியில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.மறுபுறம் அதற்கு இணையான மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது.தற்பொழுது அனைத்தும் டிஜிட்டலாகி விட்டது.
வீட்டு மளிகை பொருட்கள் வாங்குவது,மின் கட்டணம் செலுத்துவது,மொபைல் ரீசார்ஜ் செய்வது போன்ற அனைத்து விஷயங்களையும் ஆன்லைன் ஆப்கள் மூலம் எளிதில் செய்துவிடுகின்றோம்.அதேபோல் LPG சிலிண்டர் புக் செய்வது போன்ற செயல்களும் மொபைல் மூலம் நடக்கிறது.பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்தனைகள UPI செயலிகள் பயன்படுத்தி வரும் நிலையில் பணமோசடியில் எளிதில் சிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ATM பின் நம்பர் கேட்பது,வங்கி கணக்கு விவரங்கள் கேட்பது போன்ற சைபர் க்ரைம் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தற்பொழுது LPG சிலிண்டர் இணைப்பு மோசடி செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.வாட்ஸ்அப் செயலியில் “உங்கள் எரிவாயு இணைப்பு இன்று இரவு 9:30 மணிக்கு துண்டிக்கப்படும்” என்ற செய்தியை அனுப்பி இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
LPG மற்றும் PNG நிறுவனங்கள் இதுபோன்ற குறுஞ்செய்திகளை ஒருபோதும் அனுப்பாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.இதுபோன்ற மோசடி செய்திகள் வந்தால் அதை திறந்து பார்க்காமல் இருப்பது நல்லது.தங்கள் சிலிண்டர் தொடர்பான விவரங்கள் அறிய சிலிண்டர் விநியோகிக்கும் ஏஜென்சியை அணுகலாம்.
மெசேஞ்சர்,வாட்ஸ்அப்பில் வரும் இதுபோன்ற மெசேஜ் லிங்க்கை க்ளிக் செய்தால் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி கும்மல் எளிதில் எடுத்துவிடும்.எனவே தங்கள் வங்கி கணக்கை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.சந்தேகப்படும் படியான செய்திகள் வந்தால் அதை டெலிட் செய்துவிடுவது நல்லது.LPG தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் அதுகுறித்து அறிய சம்மந்தப்பட்ட ஏஜென்சியை தொடர்பு கொள்வது நல்லது.