வங்கியில் லோன் வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
92

வங்கியில் லோன் வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒரு வங்கியில் நாம் லோன் வாங்குகிறோம் என்றால் நம்முடைய மாத சம்பளத்தை பொறுத்து வட்டி அமையும். அதிகமாக சம்பளம் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டியும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக வட்டியும் வங்கியில் போடப்படுகிறது.

அதாவது ஒரு நபர் 5 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்றால் அவர் கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும் வட்டியை சரியாக கட்டி விடுவார் என்ற நம்பிக்கையில் வங்கி அவருக்கு லோன் கொடுக்கும். அதுவே ஒரு நபர் 40 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறார் என்றால் அவர் வட்டியை கட்டி விடுவாரா இல்லையா என்ற கேள்வி வங்கிக்கு இருந்து கொண்டே இருக்கும்.

எனவே அதிக சம்பளம் வாங்கி அதிக சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்டியும் குறைந்த சம்பளம் வாங்கி குறைந்த சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு அதிக வட்டியிலும் லோன் கொடுக்கப்படுகிறது. சில வங்கியில் 10.25% முதல் 25% வரை வட்டிக்கு லோன் கொடுக்கப்படுகிறது. இந்த சதவிகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.

இதனை அடுத்து சிபில் ஸ்கோரை நாம் சரியாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் எந்த வங்கியில் லோன் வாங்கினாலும் முதலில் அவர்கள் சிபில் ஸ்கோரை தான் பார்ப்பார்கள். ஏனெனில் இதற்கு முன்பு ஒரு வங்கியில் லோன் வாங்கி சரியாக வட்டியை கட்டி வந்திருந்தால் சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்கும், சரியாக வட்டியை கட்டவில்லை எனில் இந்த சிபில் ஸ்கோர் ஆனது மிகவும் குறைந்து காணப்படும்.

அதாவது சிபில் ஸ்கோர் ஆனது 500 லிருந்து 600 வரை இருந்தால் அந்த நபர் சரியாக வட்டியை கட்டி விடுவார் என்று முடிவு செய்து அவரிடமிருந்து அவருடைய முகவரிகள் அனைத்தையும் சேகரித்து அதை சரி பார்த்துவிட்டு பிறகு வங்கியில் இருந்து லோன் தொகையை வழங்குவார்கள். இதில் processing fees மட்டும் நாம் எவ்வளவு ரூபாய் லோன் வாங்குகிறோமோ அதற்கு ஒரு சதவிகிதம் கட்ட வேண்டி வரும்.

நாம் வாங்கக்கூடிய இந்த லோன் தொகையானது ஒவ்வொரு வங்கிகளிலும் மாறுபடும். ஒரு சில வங்கிகளில் ஒரு லட்சம் முதல் 25 லட்சம் வரை பர்சனல் லோன் வழங்குகிறார்கள். ஆனால் ஒரு சில வங்கிகளில் 40,000 வரை மட்டுமே வழங்கி வருகிறார்கள். இதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் இந்த லோன் தொகையானது மாறுபடும்.

இந்த லோன் ஆனது அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்து மாதம் 25 ஆயிரம் மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு, அல்லது பிசினஸ் செய்பவர்களுக்கு ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருப்பது, மற்றும் மருத்துவர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் ஆகியோருக்கு பர்சனல் லோன் வழங்கப்படுகிறது. ஆனால் சில வங்கிகளில் இந்த முகவரிகள் எதுவும் கேட்காமலேயே லோன் வழங்கி வருகிறார்கள்.

இது போன்ற நிறைய வழிமுறைகளை ஒரு சிலர் பின்பற்ற தவறிக்கொண்டு ஆன்லைனில் லோன் வாங்குகிறார்கள். ஆன்லைனில் லோன் வாங்குவது தவறல்ல ஆனால் அது சரியானதா என்பதை உறுதி செய்து கொண்டு வாங்க வேண்டும். ஏனெனில் அதில் மோசடி செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

 

Previous articleஇனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!!
Next articlePrasar Bharati நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் ரூ.80,000/- வரை சம்பளம்!!