உணவுசார்ந்த தொழில் ஆரம்பிக்க போறீங்களா?அப்போ உங்களுக்கு இந்த தகவல்!!!
எக்காலத்திலும் லாபம் தரும் துறைதான் உணவுத்துறை.இத்துறையில் தற்போது ஆண்கள் பெண்கள் என இருவருமே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.உணவகம் மட்டுமல்லாது உணவு சார்த்த துறைகளான உணவு மூலப்பொருட்களான மசாலா பொருட்கள் விற்பனை,கேக்,சத்து மாவு போன்ற சிறு தொழில்கள் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனைத்தொடர்ந்து அந்த உற்பத்தி பொருள்களை முறையாக சந்தை படுத்த எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டுமென்று பின்வருமாறு பார்ப்போம்.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ(FSSAI):
இந்த எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழானது இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறையால் வழங்கப்படுவதாகும்.இது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும்.உணவு பாதுகாப்பு துறையில் பதிந்துள்ள அனைவரும் இச்சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாகும்.
உணவகம் மட்டுமல்லாது உணவு மூல உற்பத்திபொருட்கள்,மெஸ்,கேன்டீன்,பேக்கிங் மற்றும் விநியோகம் செய்வோர் மேலும் உணவு வணிகம் செய்ய விரும்பும் அனைவரும் இந்த சான்றிதழ்களை கட்டாயமாக பெற்றிக்க வேண்டும்.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் வாங்க தேவைப்படும் ஆவணங்கள்:
எதாவதொரு சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வணிகத்தின் பெயர் மற்றும் முகவரி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அறிவிப்பு படிவம், வணிகத்தின் இதர விவரங்கள் ஆகியவற்றை இந்த சான்றிதழ் பெற விழையும் சிறு மற்றும் குறு உணவுத்தொழில் முனைவோர் சமர்பிக்கவேண்டும்.
யாரெல்லாம் பதிவு செய்யவேண்டும்?
ரூ.12 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை ஆண்டு வருமானம் வரும் வணிகங்கள், சிறு மற்றும் குறு மூலப்பொருள் உற்பத்தியாளர்கள், சேமிப்பு அலகுகள், டிரான்ஸ்போர்ட்டர்கள், சில்லறை வியாபாரிகள், உணவகம் தொடங்க நினைப்பவர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் பெற வேண்டும்.