நாம் மன நிம்மதி கிடைக்க கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம்.கோயிலுக்கு சென்றால் நம் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.வாழ்வில் திருப்பம் கிடைக்க கோயிலுக்கு செல்ல பலரும் விரும்புகின்றனர்.
சிலர் கோயிலுக்கு பக்தியுடன் செல்கின்றனர்.சிலர் பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக கோயிலுக்கு செல்கின்றனர்.எப்படி இருந்தாலும் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம்.
நாம் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் நமது வீட்டில் செய்யக் கூடாத சில முக்கிய விஷயங்கள்:
1)கோயிலுக்கு சென்று வந்த பின்னர் கை கால்களை கழுவிவிட்டு வீட்டிற்குள் செல்லக் கூடாது.
2)கோயிலில் கொடுக்கும் திருநீறு,குங்குமம் ஆகியவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து கண்ட இடத்தில் கொட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
3)கோயிலுக்கு சென்று வந்த பின்னர் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கோயிலுக்கு சென்றால் நேராக வீட்டிற்கு வர வேண்டும்.இப்படி செய்தால் மட்டுமே தெய்வ சக்தி உங்கள் வீட்டிற்கு வரும்.
4)கடவுளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மாலை மற்றும் பூக்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.கோயிலுக்கு சென்று வந்த பின்னர் தகாத வார்த்தையில் பேசுவது,சண்டையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
5)கோயிலுக்கு சென்று வந்த உடன் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.கோயிலுக்கு சென்று வீடு திருப்பும் பொழுது உணவகங்களில் சாப்பிடுதல்,உறவினர் இல்லத்திற்கு செல்லுதல் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
6)கோயிலுக்கு சென்று வந்த பின்னர் வீட்டு பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து அமைதியாக தியானம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் மன நிறைவு கிடைக்கும்.