திருப்பதிக்கு செல்பவரா நீங்கள்? மீண்டும் இது அமல்! கட்டாயம் வாங்கி செல்லுங்கள்!
திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் வண்ணமாகவே இருப்பர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சில மாதம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் தொற்று பரவல் குறைந்த உடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி தந்தனர். அதேபோல இரண்டாம் அலையின் போது அதிக அளவு தொற்று பரவல் காணப்பட்டதால் மக்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதித்தனர்.அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் பொதுமக்கள் அதிக அளவு கூட்டம் கூடுவதால் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளித்தனர்.
அதேபோல அரசுப் பேருந்துகளில் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பேருந்து பயணச் சீட்டுடன் ரூ 300 செலுத்தி சிறப்பு தரிசனம் சீட்டும் வழங்கி வந்தனர். தொற்று பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் அத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதன் பிறகு ரூ 300 சிறப்பு கட்டணம் செலுத்தி மக்கள் தரிசனம் செய்யலாம் என்பது மட்டுமே அமலில் இருந்தது. தற்பொழுது தொற்று பரவல் குறைந்து காணப்படுவதால் மீண்டும் அரசு பேருந்துகளில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் முறையை தொடங்கியுள்ளனர்.
அதனால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் பயணச்சீட்டு வாங்கும் பொழுதே ரூ 300 செலுத்தி விரைவு தரிசன டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். அதேபோல தினந்தோறும் காலை 11 மணிக்கும் மாலை 4 மணிக்கும் விரைவு தரிசனம் நடைபெறும். பக்தர்கள் இதில் கலந்து கொள்ள உதவியாக சிறப்பு உதவி மையங்கள் செயல்பட உள்ளது. மேலும் திருப்பதியில் இருந்து சென்னை பெங்களூரு ,காஞ்சிபுரம் ,புதுச்சேரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் 650 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி முதல் பேருந்து பயணத்திற்கான முன்பதிவு செய்யும் இணையதளம் மாற்றப்படும் என்று கூறியுள்ளனர். அதேபோல திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளனர்.