சொந்த வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் தான் சாஸ்திரம் பார்க்க வேண்டும் என்றில்லை, வாடகை வீட்டில் இருப்பவர்களும் சாஸ்திரத்தை கடைபிடிக்கலாம். வாடகை வீட்டில் நாம் கவனிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி இங்கே காண்போம்.
1) சில நேரங்களில் பாதுகாப்பிற்காக நீங்கள் குடியிருக்கும் வாடகை வீட்டின் பூட்டுக்களை மாற்ற முயற்சிக்கலாம், இதில் தவறேதும் இல்லை தான். ஆனால் நீங்கள் உங்கள் வீட்டின் உரிமையாளரின் தலையீடு இல்லாமல் இதுபோன்று பூட்டுக்களை மாற்றுவது சில சமயங்களில் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று மாற்றங்களை செய்யுங்கள்.
2) சில வாடகை வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் சில மாற்றங்களை கொண்டு வர விரும்பமாட்டார்கள். சிலர் வாஸ்து சாஸ்திரத்தை நம்புவார்கள் அதனால் நீங்கள் வீட்டிற்கு வர்ணம் பூசுவது என்றால் உரிமையாளரின் அனுமதியை பெற்று பூசுங்கள்.
3) வாடகை வீட்டில் மேற்கு அல்லது தெற்கு திசையில் கண்ணாடிகள் எதுவும் வைக்கப்பட்டு இருந்தால் அவற்றை காகிதம் அல்லது துணியால் மூடிவைக்க வேண்டும்.
4) நீங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் ஏதேனும் பகுதி உடைந்திருந்தால், உடனடியாக யோசிக்காமல் அந்த வீட்டை மாற்றிவிடுங்கள்.
5) நீங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் மேற்கு பகுதி பெரிதாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அப்படியிருந்தால் அது உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.
6) நீங்கள் ஒரு வீட்டிற்கு வாடகைக்கு செல்வதற்கு முன்னால் அந்த வீட்டில் மேற்கு பகுதியில் துளைகள் எதுவும் உள்ளதா அல்லது அடித்தளத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7) நீங்கள் என்னதான் செல்லப்பிராணிகளை விரும்புபவர்களாக இருந்தாலும், உங்கள் வீட்டின் உரிமையாளர் செல்லப்பிராணிகளை வளர்க்க அனுமதிப்பாரா என்பதை தெரிந்துகொண்டு நீங்கள் வளர்க்கலாம்.
8) குத்தகைக்கு வீடு எடுத்து இருந்தீர்கள் என்றால் குத்தகை காலம் முடிவதற்கு முன்னால் நீங்கள் அந்த வீட்டை விட்டு காலி செய்துவிட கூடாது.
9) நீங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் ஏதேனும் பொருட்களை சரிசெய்ய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும், இல்லையென்றால் அவர்கள் உங்கள் மீது சில சமயம் வழக்கு தொடர நேரிடும்.