ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி வெளியிட்ட புதிய அப்டேட்!
இந்தியாவில் பல முன்னணி வங்கிகள் இருக்கின்றது.அதில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.இந்த வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு பல்வேறு விதமான சலுகைகளை கொடுத்து வருகின்றது.அதிலும் குறிப்பாக டிஜிட்டல் வங்கி சேவையில் பல்வேறு விதமான அப்டேட்களை வழங்கி வருகின்றது.
அந்தவகையில் தற்போது மூத்த குடிமக்கள் எளிதில் ஓய்வூதியம் ஸ்லிப் பெற புதிய வழிமுறை செய்துள்ளது.இந்த சேவையை பெற எந்த விதமான கட்டணமும் வசூல் செய்ய படமாட்டாது.மேலும் இந்த சேவையை பெறுவதற்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் 7208933148 என்ற எண்ணுக்கு WAREG என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
இந்த குறுந்தகவலை உங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து அனுப்ப வேண்டும்.இதை பதிவு செய்த பிறகு எஸ்பிஐ யில் இருந்து உங்கள் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வரும்.அதற்கு நீங்கள் பதிலளிக்கும் விதமாக 9022690226 என்ற எண்ணிற்கு ஹாய் என்ற குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
வங்கி கணக்கு விவரம் ,மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் ஓய்வூதியம் ஸ்லிப் என்ற மூன்று ஆப்ஷன்கள் கொண்ட குறுஞ்செய்தி வரும்.இதில் ஓய்வூதியம் ஸ்லிப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பென்ஷன் ஸ்லிப் வந்து விடும்.