அதிகப்படியான தலைமுடி உதிர்வு இருப்பவர்கள் வீட்டு முறையில் சீரம் தயாரித்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம்.
ஆலிவ் வேரா ஜெல் – இரண்டு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கற்றாழை துண்டுகளை நறுக்கி அதனை தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் அதனுள் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் நான்கு,ஐந்து முறை கற்றாழை ஜெல்லை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.பின்னர் இந்த கற்றாழை ஜெல்லை வாணலி ஒன்றில் போட்டு இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
இந்த எண்ணையை ஆறவைத்து பாட்டிலுக்கு வடிகட்டி ஆறிய பிறகு தலைக்கு பயன்படுத்தினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
ஆலிவ் வேரா ஜெல் – இரண்டு தேக்கரண்டி
க்ரீன் டீ டிடாக்சன் – அரை தேக்கரண்டி
தேன் – ஒரு தேக்கரண்டி
கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு ஆலிவ் வேரா ஜெல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் க்ரீன் டீ டிடாக்சனை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக கலந்து தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
செம்பருத்தி பூ
ஆலிவ் வேரா ஜெல்
ஒரு முழு செம்பருத்தி பூவில் இருந்து இதழை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஆலிவ் வேரா ஜெல்லை போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.இந்த கலவையை தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ரோஸ்மேரி ஆயில்
கிளிசரின்
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி ரோஸ்மேரி ஆயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு கிளிசரின் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை தலைக்கு தடவினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.