உங்கள் பெட்ஷீட்களில் கெட்ட வாடை வீசுகிறதா? இதோ இதற்கான சிறந்த டிப்ஸ்!!

Photo of author

By Divya

மழை மற்றும் குளிர்காலங்களில் அணியும் உடைகளில் மட்டுமின்றி டவல்,பெட்ஷீட் போன்றவற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.பருவ காலங்களில் வீடுகள் ஈரப்பதமாக இருப்பதன் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பருவ காலங்களில் பெட்ஷீட்களில் துர்நாற்றம் வீசாமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

டிப் 01:

கற்பூரம்(சூடம்)

பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரத்தை வைத்து பெட்ஷீட்டில் வீசும் கெட்ட வாடையை கட்டுப்படுத்த முடியும்.

ஒரு கற்பூரத்தை தூளாக்கி ஒரு தாளில் கொட்டி மடித்துக் கொள்ளவும்.இதை பெட்ஷீட் மீது வைத்து விடுங்கள்.இரவு முழுவதும் வைத்துவிட்டு பகலில் அந்த பெட்ஷீட்டை வெயிலில் காயவைத்து எடுத்தல் கெட்ட வாடை வீசுவது கட்டுப்படும்.

டிப் 02:

சமையல் சோடா

பெட்ஷீட்டை வாஷிங் பவுடரில் ஊறவைத்து துவைத்த பிறகு அகலமான பாத்திரத்தில் கால் கைப்பிடி சமையல் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்கவும்.பிறகு துவைத்த பெட்ஷீட்டை அதில் போட்டு அலசி காயவைத்தால் துர்நாற்றம் கட்டுப்படும்.

டிப் 03:

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

பெட்ஷீட்டை துவைத்த பிறகு கால் கைப்பிடி சமையல் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்த தண்ணீரில் அதை போட்டு அலசி காயவைத்தால் துர்நாற்றம் வராமல் இருக்கும்.

டிப் 04:

சிலிக்கான் பாக்கெட்

பெட்ஷீட் வைத்துள்ள இடத்தில் சிலிக்கான் பாக்கெட்டுகளை வைத்தால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.பெட்ஷீட்டை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்தால் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.