உடலில் அக்குள்,கழுத்து போன்ற பகுதிகளில் வியர்வை வெளியேறுவது இயல்பான விஷயம் தான்.உடலில் உள்ள அழுக்கு கழிவுகள் தான் வியர்வையாக வெளியேறுகிறது என்றாலும் அவை அதிகமாக வெளியேறும் பொழுது உடல் துர்நாற்றம் வீசி நமக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
இதில் சிலருக்கு உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் அதிகமாக வியர்வை வெளியேறும்.இந்த கை கால் வியர்வை அதிகரித்தால் ஒருவித வாசனை வெளியேறும்.இதை Hyperhidrosis என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
இப்படி கை,கால்களில் வெளியேறும் வியர்வையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.
1)பிளாக் டீ
தேயிலை தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து உள்ளங்கை மற்றும் கால் பாதங்கள் மீது அப்ளை செய்து வந்தால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.
2)சேஜ் டீ
உள்ளங்கை வியர்வை மற்றும் கால் பாத வியர்வையை கட்டுப்படுத்த சேஜ் டீ செய்து பருகலாம்.சேஜ் இலையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த டீ வியர்வை சுரப்பியை கட்டுப்படுத்துகிறது.
3)ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்து கைகளை சிறிது நேரம் ஊறவிடுங்கள்.
பிறகு கால் பாதங்களை ஊறவையுங்கள்.இப்படி செய்தால் கை,கால்களில் வியர்ப்பது கட்டுப்படும்.
4)சமையல் சோடா பேஸ்ட்
கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.இப்படி தினமும் செய்து வந்தால் கை,கால்களில் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.
5)லெமன் சாறு
உள்ளங்கை மற்றும் பாதங்களில் எலுமிச்சை சாறு தடவி சுத்தம் செய்து வந்தால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.
6)சந்தன பேஸ்ட்
தினமும் குளிப்பதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி சந்தனத்தை குழைத்து பேஸ்ட்டாக்கி உள்ளங்கை மற்றும் பாதங்களில் தடவி சுத்தம் செய்தால் வியர்ப்பது கட்டுப்படும்.அதேபோல் கற்பூரத்தை வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு கரைத்து கை மற்றும் கால்களை சுத்தம் செய்தால் வியர்வை வெளியேறுவது தடுக்கப்படும்.