என்னது உங்கள் உள்ளங்கை கருப்பா இருக்கா? அப்போ உடனே இதை செய்து கருமையை போக்குங்கள்!!

Photo of author

By Divya

என்னது உங்கள் உள்ளங்கை கருப்பா இருக்கா? அப்போ உடனே இதை செய்து கருமையை போக்குங்கள்!!

உங்களில் சிலருக்கு உள்ளங்கை ரேகை மற்றும் விரல் இடுக்குகள் கருமையாக இருக்கலாம்.இந்த கருமையை கண்டுகொள்ளாமல் விட்டால் அவை உங்கள் கை அழகை கெடுத்து விடும்.எனவே இந்த கருமையை போக்குவதற்கு கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள்.

தயிர்
தேன்
அரிசி மாவு
மஞ்சள் தூள்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/4 தேக்கரண்டி தயிர் மற்றும் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்டை உள்ளங்கை மற்றும் கை இடுக்குகளில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து வந்தால் அவ்விடத்தில் உள்ள கருமை நீங்கும்.

சந்தனத் தூள்
அரிசி கழுவிய நீர்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனத் தூள் போட்டு சிறிது அரிசி கழுவிய நீர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை உள்ளங்கை மற்றும் கை இடுக்குகளில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து வந்தால் அவ்விடத்தில் உள்ள கருமை நீங்கும்.

கஸ்தூரி மஞ்சள்
வெண்ணெய்
வடித்த கஞ்சி

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்,1/4 தேக்கரண்டி வெண்ணெய் மற்றும் 1/2 தேக்கரண்டி வடித்து ஆறவைத்த கஞ்சி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.இந்த பேஸ்டை உங்கள் உள்ளங்கை மற்றும் விரல் இடுக்குகளில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவி சுத்தம் செய்யவும்.

இவ்வாறு ஒரு மாதம் தொடர்ந்து செய்தாலே உள்ளங்கையில் உள்ள கருமை நீங்கி விடும்.