கால்பந்து திருவிழா- காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி …

0
285

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது. கத்தாரின் அகமது பின் அலி மைதானத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார்.

77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியாவை தோற்கடித்த அர்ஜெண்டினா அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

Previous articleஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!
Next articleஇந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதல்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here