குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !! ஆறாவது முறையாக தகுதி!

Photo of author

By Vijay

குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !! ஆறாவது முறையாக தகுதி!

உலக கோப்பைக் கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியானான அர்ஜென்டினா குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் 6-வது முறையாக கால்பதித்தது.

கத்தார் நாட்டின் தோஹாவில் 22-வது உலக கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று,காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் உள்ளன.காலிறுதி போட்டியின் முடிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோ,குரோசியா,ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

கத்தாரின் அகமது பின் அலி மைதானத்தில் நடைப்பெற்ற நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஷ்திரேலியா அணிகள் மோதின.அர்ஜென்டினாவின் மெஸ்ஷி ஒரு கோல் அடித்து முதலாவது பாதியில் 1-0 என தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார்.இரண்டாவது பாதியில் ஜூலியன் அல்வாரேஸ் ஒரு கோல் அடித்தார்.77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 2-1  என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவினை வென்று அரையிறுதிப்  போட்டிக்கு தகுதிப்பெற்றது. போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் முதலாவது அரையிறுதிப்போட்டி முன்னால் சாம்பியனான அர்ஜென்டினாவுக்கும், குரோசியாவிற்க்கும் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.

உலக தர வரிசையில் 3-வது இடம் வகிக்கும் முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினா தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் குரோசியாவுடன் மோதியது.இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் களத்தில் அனல் பறந்தது. பரபரப்பான ஆட்டத்தில் பரபரப்பான ஆட்டத்தில் 34 –வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் கோலை அடித்து தூள் கிளப்பினார். அந்த உற்சாகமே முடியாத நிலையில்  அடுத்த 5 நிமிடத்தில் மற்றொரு ஆச்சர்யமாக அணியின் சக வீரர் ஜூலியன் அல்வாரஸ் 35-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் விளிம்புக்கே கொண்டு சென்றார். இதனால் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகுத்தது.

அடுத்து தொடங்கிய சூடுபறந்த இரண்டாவது பாதியின் 69-வது நிமிடத்தில் அடுத்த வெகுமதியாக அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரஸ் அணிக்கான தனது 3-வது கோலை பதிவு செய்து அணிக்கான வெற்றிக்கு வித்திட்டார்.தொடர்ந்து குரோசியா வீரர்கள் முயன்றும் ஒரு கோல் கூட அந்த அணியால் அடிக்க முடியவில்லை.கூடுதல் நேரம் வழங்கப்பட்ட பிறகும் கூட அதன் முயற்சிகள் தோல்வியை தழுவின. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா குரோசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிப்பெற்றது.

3-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா லீக் சுற்று தொடக்கத்தில் சவூதி அரேபியாவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவியது. பின் மெக்சிகோ, போலந்து அணிகளை தோற்கடித்து நாக்-அவுட் சுற்றினை எட்டிய இந்த அணி 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து காரசாரமான மோதல், வாக்குவாதங்கள் இடையே பெனால்டி ஷூட்- அவுட்டில் நெதர்லாந்தை விரட்டி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது.

அரையிறுதியில் ஒரு போதும் வீழாத அணி என்ற பெருமையோடு இறுதிப் போட்டிக்குள் கால்பதித்த அர்ஜென்டினா இதுவரை 1978 மற்றும்  1986 என இரண்டு ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் வெற்றிப் பெற்று உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இன்று நடக்கும் இன்னொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் உடன் மொராக்கோ மோதுகிறது.