அர்ஜென்டினா மெர்ஸியும் அண்ணாமையும் ஒன்றுதான்.. பெரிய அளவில் ஐஸ் வைத்த பாஜக நிர்வாகி! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் இதில் கிட்டத்தட்ட 32 நாடுகள் கலந்து கொண்டது. இதன் இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள் மோதிக்கொண்டதில் , முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இரு அணிகளும் 2-2 என்ற கோள்களில் இருந்தது.
இதற்கு அடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டு அணிகளும் சமம் மதிப்பெண்களிலேயே காணப்பட்டது. இதனையடுத்த பெனால்டி சூட் அவுட் கொடுக்கப்பட்டது. அதில் 4 க்கு 2 என்ற கோள்களில் பிரான்ஸை தோற்கடித்து அர்ஜென்டினா வெற்றி அடைந்தது.
பிபா வேர்ல்ட் கப் கோப்பையை அர்ஜென்டினா கைப்பற்றியதற்கு முக்கிய பங்கு மெஸ்ஸிக்கு சேரும். பல கோப்பைகளை வாங்கிய மெஸிக்கு உலகக்கோப்பை வாங்குவது இதுதான் முதல் முறை. இவ்வாறு அர்ஜென்டினா வெற்றியடைந்தது அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும்அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Both are the “Greatest of all times”🔥 pic.twitter.com/Mh0P3OpIwP
— Amar Prasad Reddy (@amarprasadreddy) December 19, 2022
அந்த வகையில் பாஜக விளையாட்டுத்துடன் மேம்பாட்டு பிரிவு தலைவர் ஆன அமர் பிரசாத் ரெட்டி அர்ஜென்டினா வெற்றியை குறித்து மெஸ்ஸியை பற்றி பேசுகையில் மெஸ்ஸியும் அண்ணாமலையும் ஒன்றுதான் என ஒப்பிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட கால்பந்து ரசிகர்கள் உச்சகட்ட கோவத்தில் உள்ளனர். மெஸ்ஸி மற்றும் அண்ணாமலை இருப்பது போல புகைப்படம் போட்டு அதற்கு கீழ் அண்ணாமலையும் மெஸ்ஸியும் எல்லா நேரங்களிலும் மிகவும் சிறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஒப்பிட்டு பேசியிருப்பது ரசிகர்களுக்கிடையே கோபத்தை கிளப்பி உள்ளது. இதனால் அவர் பதிவு உள்ளதற்கு கீழ் பலரும் கோபமாகவும், கேலி கிண்டல் செய்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.