வெற்றி பாதைக்கு திரும்பிய அர்ஜெண்டினா.. உற்சாகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்..!

0
346

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கால்பந்து ரசிகர்களின் திருவிழா என்றே கூறலாம். மெஸ்ஸி, ரொனால்டோ,நெய்மார் என கால்பந்து ரசிகர்கள் தங்களின் ஆதர்சங்களை கொண்டாடி வருகின்றனர். 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.

8 பிரிவுகளாக உள்ள அணிகள் தங்களின் பிரிவுகளில் உள்ள அணிகளோடு தலா ஒரு முறை மோதவேண்டும்.அதன்பின், காலிறுதி போட்டியும் அரையிறுத, இறுதி போட்டிகளும் நடைபெறும்.இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மெக்சிகோவை எதிர்கொண்டது அர்ஜெண்டினா அணி.

சென்ற போட்டியில் சவுதி அரேபியாவுடன் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு வர அர்ஜெண்டினா வெற்றி பெற வேண்டும் என்பது அந்த அணியின் ரசிகர்களின் வேண்டுதலாக இருந்தது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. பரபரப்பான போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

உலகக்கோப்பை தொடக்கத்திலேயே இது மெஸ்ஸின் கடைசி உலகக்கோப்பை என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உலக்கோப்பையை வெல்லும் முனைப்புடன் தனது முழு ஆற்றலையும் வெள்ளிபடுத்தி விளையாடினார்.

அதன்பலனாக ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். அதன்பின்னர், 87வது நிமிடத்தில் மெஸ்ஸியின் அசிஸ்டில்பெர்னான்டெஸ் சிறப்பான கோல் ஒன்றை அடைத்தார். இதன்மூலம், 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றியை சுவைத்தது.இதனை தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி போலந்தை சந்திக்கிறது அர்ஜெண்டினா.

Previous articleஇவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!
Next articleகணவனை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here