கணவனை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!

0
235

கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பக்சிவாலா கிராமத்தில் வசித்து வந்தவர் ஜஸ்வீர் கவுர். இவருக்கு காலாசிங் என்பவருடன் திருமணம் நடந்தது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தனது கணவனை காணவில்லை என புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சந்தேகம் அவரின் மனைவி ஜஸ்வீர் கவுர் மீது திரும்பியது.இதனை அடுத்து, அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அப்போது மனைவியே கணவனை கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையில், அவரது உடலை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, கழிவறைக்காக தோண்டப்பட்ட அதில் கணவரின் உடலை புதைத்துள்ளார். இதனை அடுத்து, அவரின் உடலை மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரி தெரிவிக்கையில்,

விசாரணையில் காலாசிங்கை கொன்று அவரது வீட்டில் புதைத்தது மனைவி என்பதை விசாரணையில் கண்டறிந்தோம்.அவரது உடலை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவெற்றி பாதைக்கு திரும்பிய அர்ஜெண்டினா.. உற்சாகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்..!
Next articleஎல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here