நியூ லுக்கில் உதயமாகும் ஆரியா!! நாளை ட்ரெய்லர் வெளியாகிறது!!

0
171
Aria emerges in New Look !! The trailer is out tomorrow !!
Aria emerges in New Look !! The trailer is out tomorrow !!

நியூ லுக்கில் உதயமாகும் ஆரியா!! நாளை ட்ரெய்லர் வெளியாகிறது!!

தமிழகம் மட்டுமல்லாமல் உலகளவில் சாக்கோ பாய் என்று அழைக்கப்படுபவர் ஆர்யா. இவர் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் ஒன்றை ஒளிபரப்பாகி தனக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எந்த ஒரு பெண்ணையும் ஆர்யாவுக்கு பிடிக்கவில்லை.

எனவே அவர் நடிகை சாய்நிஜா வை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு முன்பு கஜினிகாந்த் மற்றும் காப்பான் திரைப்படத்தில் சாய்நிஜா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். அப்படத்தில் ஏற்ப்பட்ட காதலினால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணத்திற்கு பின்பு டெடி என்னும் ஃபேண்டசி திரைப்படத்தில் இணைந்து நடித்த கலக்கி இருந்தனர். இதைத் தொடர்ந்து ஆர்யா தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்னும் படம் ஒன்றில் நடித்துள்ளார். அப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் ஆர்யாவின் 30வது படமாக சார்பட்டா பரம்பரை படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்காக ஆர்யா பல்வேறு கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் பாக்சிங் கற்றுக் கொண்டு நடித்ததாக தெரிவித்துள்ளனர். கே9 ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வடசென்னை வாலிபராகவும் பாஸ்கராகவும் நடித்துள்ளார் என படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தை கூட அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடி வெடுத்துள்ளது. மேலும் ஜூலை 22-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.

Previous articleமோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்!
Next articleஇங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை!